இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன் எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே…
மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா
புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….
அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி
வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ் மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும் உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன் பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின் நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…