பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு
பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு தேனி மாவட்டம் கம்பத்தில் 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து விருதும், பொற்கிழியும் வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் சூலை மாதம் வரை வெளிவந்த கவிதை நூல்களில் ஓசூரைச் சேர்ந்த பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய ‘செப்பேடு’ மரபுக் கவிதை நூலை இவ்வாண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்தது. ஆடி 31, 2047 / 15 -08 – 2016 திங்களன்று. …
கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குப் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இருளில் மறையும் நிழல்’ சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுகதை நூலுக்கான இரண்டாம் பரிசினை வழங்கியது. கடந்த 37 ஆண்டுகளாகக் கம்பத்தில் இயங்கிவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ஆண்டுதோறும் விடுதலைத் திருநாளன்று நடைபெறும் இந்தப்…