திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை. மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்ட(து) இல். மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர். நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்; நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார். தேவர் அனையர் கயவர்,…