தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 110 : புதிய அறிவாய்தங்கள் தொடர்ச்சி) கரிகாலனின் அரும்பணி நேற்று நமது செய்தி அரசியல் இணைய அரங்கில் (உ)ரூட்சு வலையொளியின் அன்பர் கரிகாலன் ‘வேங்கைவயல் இழிவு’ குறித்து விரிவாகப் பேசினார். அன்பர்களின் வினாக்களுக்கும் விடையளித்தார். ஒற்றை வீரர் படையாக அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. புறஞ்சார்ந்து புலனாய்வு செய்து உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.குடிநீரில் மலங்கலந்த கொடியவன் அல்லது கொடியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையை அவர் நெருங்கி விட்டார். ஆனால் அந்த இறுதி உண்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க…
தமிழ்நாடும் மொழியும் 8 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 7 தொடர்ச்சி) கடைச்சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்கக் காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த என்போரின் குறிப்புகளும், பெரிப்புளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம். தமிழ் வேந்தர்கள் சங்கக் காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ…
புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: தோற்றவன் வெற்றி!
புறநானூற்றுச் சிறுகதைகள் 4. தோற்றவன் வெற்றி! ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய பாடல்களும் அந்தப் போரில் வெற்றி பெற்றவனாகிய கரிகாலனையே சிறப்பித்துப் பாடியிருந்தன. வென்றவனைப் பற்றி வெற்றிமங்கலம் பாடும்போது அப்படிப்பாடுவதுதானே இயற்கையும் ஆகும்? ஆனால், இறுதியாக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு…
இலாத்துவிய மொழியில் திருக்குறள்!
இலாத்துவிய மொழியில் திருக்குறள் காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram). இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை! ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…