தோழர் தியாகு எழுதுகிறார் 32: கரி-எரி பரவல் தடை
(தோழர் தியாகு எழுதுகிறார் 31 தொடர்ச்சி) கரி-எரி பரவல் தடை உலகம் அழிந்து போய் விடுமோ? என்ற அச்சத்துக்கு இரு முகன்மைக் காரணிகளாகச் சொல்லப்படுகிறவை: 1) அணு ஆய்தப் போர்: 2) காலநிலை மாற்றம். அணுக்குண்டின் அழிவாற்றலை இரோசிமாவிலும் நாகசாகியிலும் கண்டோம். மீண்டும் ஓர் அணுவாய்தப் போர் மூளக் கூடாது என்றால் அணுவாய்தங்களை அடியோடு அழித்து விட வேண்டும், புதிய அணுவாய்தங்கள் செய்யக் கூடாது. அணுவாய்தங்களுக்கு மூலப்பொருள் கிடைக்காமற்செய்ய வேண்டும் என்றால் அணுவாற்றல் இயற்றுவதைக் கைவிட வேண்டும். அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே…