கருகும் பிஞ்சுகள்  பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…