மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்  தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார்.  உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  …

உங்களைப் போன்றவனின் உள்ளக்குமுறல் – ஈழப்பதிவுகள் : 1-5

 – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்!  பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்!  5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின்  மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற…