பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்
பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ச.க வாக்கு எண்ணிக்கையின் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் அதற்குச் சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட நாடகம் என இதனைப் பொதுமக்களே கூறுகின்றனர். வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நாம் பின்வருவனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வப்பொழுது எத்தனை பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் இல்லை. இதுவரை ஒருவர்கூட…