ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா? ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்! தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே முதன்மையையும் மக்கள் ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது. தமிழர்களுடைய சிக்கல்களை நாம் அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…