வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான் தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது. உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் உக்கும் (சிங்கு) காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு…
கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! 15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். ) மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான். அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின்…
இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள். இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா,…
கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை
கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார். இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது: கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து…
நிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்
ஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது. தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில் வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின்…
“தமிழக அரசு மூவர் தூக்கை நீக்க வேண்டும்”
உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் உரை! இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்