கருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]
கருத்துக் கதிர்கள் 19 & 20 [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?] 19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கிரண்(பேடி) பொறுப்பேற்ற பொழுதே, முதல்வருக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளும் போக்கு தவறு எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். மத்திய அரசின் முகவர்(agent)தான் அவர். என்றாலும் மாநில அரசுடன் இணைந்தும் தேவையான நேர்வுகளில் வழிகாட்டியும் மாநில மேம்பாட்டிற்காகப் பணியாற்றியிருக்க வேண்டும். மாறாகத் தில்லி வாக்காளப் பெருமக்கள் அவரது முதல்வர் கனவுடன் அவரைத் தூக்கி எறிந்ததால்…