தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது! கருநாடக இசை தமிழிசையின் ஒரு கிளையே அல்லது திரிபேயாகும். தெலுங்கு நாட்டில் என்றுமே அது காணப்படாதது மட்டுன்று, தெலுங்கு மொழியின் பெயர், வரலாற்றில் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் அதன் அரங்குகளும் அதன் முழு இசையியக்கமும் சிறந்து விளங்கின. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும் கலை உயர்வையும் கலையின் பழமையையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலுக்கு உரை வகுத்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் … … காலத்திலும் சிலப்பதிகாரத்திற்கு உதவியாகவிருந்த இசையிலக்கண நூல்களும் இலக்கிய…
கருநாடக இசை என்பது தமிழிசையின் பிற்கால வளர்ச்சியே
நம்நாட்டில் மிகப் பழமையானது, தொன்மைச் சிறப்பு வாயந்தது என்று போற்றப்படுவது தென்னாட்டுக் கருநாடக இசையாகும். ஆனால் இக்கருநாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும், நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்ந்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்று நன்கு விளங்கும். – முனைவர் சு.சீதா: தமிழகக் கலைச் செல்வங்கள்: இசைக்கலை: பக்கம்.86