ஊரும் பேரும் 58 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – கருந்திட்டைக்குடி
(ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – வைப்புத் தலங்கள் – தொடர்ச்சி) கருந்திட்டைக்குடி தஞ்சை நகரத்தைச் சேர்ந்த சிற்றூர்களில் ஒன்று கருந்திட்டைக்குடி, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அவ்வூர் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயர் பெற்றது. அது வைப்புத் தலங்களில் ஒன்றென்பது,“கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி” என்ற திருநாவுக்கரசர் பாட்டால் விளங்கும். அவ்வூர்ப் பெயர் இப்பொழுது கரந்தட்டாங்குடி என மருவி வழங்கும். தக்களூர்‘தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்‘ என்று திருநாவுக்கரசரால் குறிக்கப்பெற்ற தக்களூர் இப்பொழுது காரைக்கால் நாட்டில் திருநள்ளாறு என்னும்…