ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ
பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…