பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 –‌ தொடர்ச்சி)   பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8   கவியரங்கக்கவிதை மயில்பொறியை   வானத்தில்   பறக்க   வைத்தோம் மணிபல்லத்   தீவிற்குப்   பறந்து   சென்றோம் குயில்மொழியாள்   கண்ணகியை   அழைத்துச்   செல்லக் குன்றுக்கு   வானஊர்தி   வந்த   தென்றே ‘உயில்‘போன்று   நம்முன்னோர்   எழுதி   வைத்த உண்மைகளை   அறிவியலின்   அற்பு  தத்தை பயில்கின்ற   காப்பியத்தில்   படித்த   தெல்லாம் பார்தன்னில்   நனவாகக்   காணு  கின்றோம் !   அணுப்பிளந்த    செய்திதனை   ஔவை   சொன்னால் அவிழ்த்துவிட்ட    புளுகுமூட்டை   என்று   ரைத்தார் அணுக்குண்டைப்    பொக்ரானில்    வெடித்த  …

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8   தலைமை வணக்கம் சித்தர்தம்   மறுபிறவி    ஆனை   வாரி சிந்தனையின்    தோற்றந்தான்    ஆனை   வாரி புத்தர்தம்    உள்ளந்தான்    ஆனை   வாரி புதுக்கருத்தை    விதைப்பவன்தான்   ஆனை   வாரி புத்தகங்கள்    தோழன்தான்    ஆனை   வாரி புதுமைகளைப்    படைப்பவன்தான்   ஆனை   வாரி முத்தமிழர்   கண்டதமிழ்    மருத்து   வத்தை முதன்மையென    உணர்த்துபவன்    ஆனை   வாரி !   திருக்குறளைத்   தேசியநூல்    ஆக்கு   தற்குத் தில்லியிலே   போராட்டம்   செய்த   வல்லோன் அருங்குறளை   ஆங்கிலத்தில்    மொழிபெ    யர்த்தே…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8   தமிழ்த்தாய் வாழ்த்து   கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !   அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…

மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 1/2 – கருமலைத்தமிழாழன்

  எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா  கவியரங்கம் இடம் —  எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம்  மதுரவாயில்  சென்னை நாள் :  பங்குனி 30, 2048 / 12 – 04 -2017 தலைமை –  கவிமுரசு  ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தலைப்பு – மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர் பாடும் கவிஞர் – பாவலர் கருமலைத்தமிழாழன் தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்           களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்           இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட…

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5  தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5   இந்தியாவில்   மட்டுமன்றி  பிரான்சு  நாட்டில் இயங்குகின்ற   பேரவைதான்   அசாம்  தன்னில் சந்தமிகு   துவக்கவிழா   காணு   கின்றோம் சார்ந்திருக்கும்   மேகாலய   மாநி  லத்தில் நந்தமுடன்   நாளையங்கே   துவக்கு  கின்றோம் நன்றாகப்   பேரவைதான்   வளர்வ   தாலே சிந்தனைகள்   ஒன்றாகி   உலக  மெல்லாம் சிறப்பாக   நட்புறவோ   ஓங்கும்  நன்றாய் !   வெற்றுரைகள்   அமர்ந்துபேசி   கலைவ  தன்று வேதனைகள்  தீர்க்கின்ற   செயல்கள்  செய்து நற்றொண்டாய்   கல்விகற்க   இயலா   ஏழை…

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5   நேரினிலே  நான்பார்க்கா   நாட்டி  லெல்லாம் நேரியநல்   நண்பர்கள்   இருப்ப  தெல்லாம் பாரினையே   பேனாக்குள்   அடக்கி  யெங்கும் பார்க்கவைக்கும்   அஞ்சல்தம்   அட்டை  யாலே ஊரினையே  கடக்காத   பெண்கள்  கூட உலகத்தின்  மறுகோடி   பெண்க   ளோடே சீரியநல்   நட்புதனை   வளர்த்துக்   கொண்டு சிறந்தறிவு   பெறுகின்றார்   பேனா  வாலே !   சிங்கப்பூர்   தனைநேரில்   பார்க்கா   முன்பு சிறப்பான   மலேசியாவைப்   பார்க்கா   முன்பு சிங்களரால்   தமிழுறவு   சிதைந்து  …

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம் இடம் –  காப்பிக்காடு (நாகர்கோவில்)   நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை –  கவிஞர் குமரிச்செழியன்]   தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்             களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்             இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்             காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும்             வீழாத   தமிழன்னையை  …

கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…