புதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்

அண்ணாவே வாழ்க! வாழ்க ! போர்முரசே தமிழர்தம் மானம் காத்த போர்வாளே ! சூழ்ச்சிகளைச் செய்து வந்த பார்ப்பனிய பகைமுடித்த படையின் ஏறே ! பகுத்தறிவு பெரியாரின் கொள்கை தாங்கி ஊர்முழுதும் குவிந்திருந்த மூடக் குப்பை உதவாத சாத்திரத்தை அறிவுத் தீயால் சேர்த்தெரித்த எழுகதிரே ! சரித்தி ரத்தைச் செதுக்கிவைத்த புதுவரியின் புறநா னூறே ! பேச்சாலும் எழுத்தாலும் திராவி டத்துப் பெருமையினை உணரவைத்து வளர்த்து விட்டாய் கூச்சலிட்டே வந்தஇந்திப் பெண்ணின் நாவைக் கூர்தமிழ்வா ளால்வெட்டி விரட்டி விட்டாய் ஓச்சிநின்ற வடமொழியின் கலப்பை நீக்கி…

கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்

கருகும் பிஞ்சுகள்  பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…