இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) 05 இலக்குவனார் அரசர் கல்லூரியில் பயின்ற போதுதான், நூலகத்தில் இருந்த மொழியாராய்ச்சி பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து, மொழி ஆராய்ச்சி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். கால்டுவெல் எழுதிய ஒப்பற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலையும் இங்குதான் கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, தூய்மை, வளமை, இனிமை முதலியன பற்றி நன்கு அறிந்தார். தமிழ்நாட்டில் பேராயக்கட்சி (காங்கிரசு) பிராமணர்களின் செல்வாக்குக்கு உட்பட்டுப் பிராமணர்களின் தலைமையில் இயங்கி வந்தது. நீதிக்…