காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து புறக்கணித்துவரும் இலங்கை அரசுக்கு, இம்முறையும் செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல்…