உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்! தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்! 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு! இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து…