மாண்டுபோன மாந்த நேயம் – நற்றமிழன்
எனது தாயைக் கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தைப் பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக மன்னியும் நண்பனை! சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன்! இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும், அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன மாந்த நேயமும் ,,,,,, http://natramizhan.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/
மண் பறித்த மானம்! -இளையவன் செயா
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக் கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு நேத்தாசியைப்பெற்று வளர்த்த வங்கமண் இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும் பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக் கழையாக நினைத்தொடித்த கவிஞர் பிழையில்லா இரவீ ந்திரநாத் தாகூர் பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை வேட்கையால் வீறுகொண்டு கெடுதலையே செய்யும் கேடர்களை வெற்றிகொள்ள வீரமுழக்கமிட்ட வீரர்கள் வற்றிப் போகாதமண் வங்கமண் !…