கோவில்களில் இறைவனுக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரத்திற்குப் பின்னால் சுவையான தகவல் உண்டு. ஆங்கில மொழியில் ‘கம்போர்’ என்று அழைக்கப்படும் கற்பூரத்தின் பின்னால் பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. ‘கம்போர்’ என்ற ஆங்கிலச்சொல் ‘கோம்ப்ர்’ எனும் பிரஞ்சுச் சொல்லிருந்துதான் தான் உருவானது. ‘கோம்ப்ர்’ எனும் இச்சொல் ‘கம்ப்போரா’ எனும் இலத்தீன் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூர்’ எனும் அரபு மொழிச் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூத் பராசு’ எனும் மலாய் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். தென்கிழக்காசியாவின் தீபகற்பமான மலாய்ப் பகுதியிலிருந்து இங்கிலாந்து காட்டிற்கு ஒரு நேர்க்கோட்டில்…