பழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு   நாடு தழுவிய ஒரே பண்பாடு. ஓரினப் பான்மை உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றில் முதலானது பரந்து விரிந்துபட்ட கல்வியாகும். தமிழ்நாட்டில் நிலையான வருண வேறுபாடு அதன் காரணமாக ஏற்படும் உயர்வு தாழ்வு ஆகியன சங்கக் காலத்தில் வலுவாக இருந்ததில்லை. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் எந்தக் காலத்திலுமே இருந்ததில்லை. காரணம், அப்பண்பு தமிழ்நாட்டுக்குரிய பண்பே அன்று. எக்குலத்தவராயினும் ஒருவர் கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அவருக்குச் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருந்தது. எந்த மன்னனின் அவைக்கு வேண்டுமாயினும் சென்று…