முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா
தமிழகப்புலவர்குழு கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் க. சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் அறம், வீரம், காதல், நட்பு, போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர். முனைவர் மறைமலை இலக்குவனார், கவிஞர் பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன் நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …
அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா
எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார். பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை…