தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தங்குதடையின்றி மிகுதியாக விற்பனை ஆகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி,சுற்றியுள்ள பிற சிற்றூர்களில் சும்பால், எருமைப்பால் என இரண்டு வகைகளாகப் பால் விற்பனை செய்கிறார்கள். பசும்பாலாக இருந்தால் அடர்த்தி குறைவாகவும், எருமைப்பாலாக இருந்தால் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். அந்துருண்டை (இரசக்கற்பூரம்), பிற வேதியல் பொருட்களைக் கலந்து பாலில் அடர்த்திகளை உண்டாக்குகிறார்கள். இவ்வாறான பால்களை வாங்கிக் காய்ச்சி மறுநாள் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்விடும் தன்மையுடையதாகிறது. இவற்றைத்தவிரப் பாலில் வேதியல்கலவைத் தூள்,…