தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2

   (தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1. தொடர்ச்சி) தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2   இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை…

கலப்பினால் வரும் கேடு! – நெல்லை ந.சொக்கலிங்கம்

மறுமலர்ச்சி இயக்கம்:   மனிதன் பண்பாடு பெற்ற நாள் தொட்டுப் பயன்பட்டு வரும் கருவி மொழி, நாட்டிற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மொழிகள் வேறுபட்டு நிற்கின்றன. மனிதன் எப்படித் தனித்து வாழவியலாதோ அது போன்றே மொழியும் தனித்து வாழவியலாது என்பது ஓரளவிற்குப் பொருந்தும். இருப்பினுங் கூட கூடுமான வரை தனித்து – அதாவது தூய்மையுடன் இயங்க முடியும். ஆனால் சிலர் கூறுகின்றார்கள். வடமொழி செத்தொழிந்தது அதன் தூய்மைப் பண்பினால்தான் என்பர். மொழி நூலறிஞர்களின் கருத்துப்படி ஒரு மொழி தன் தூய்மையைப் பாதுகாத்ததனால் அழிந்து விடாது என்பதாகும். வடமொழி…