‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன் ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால் கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள் கொள்ள இயலவில்லை,…