இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி) தமிழர் வீரம்வீர விளையாட்டு வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர்….
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது! கருநாடக இசை தமிழிசையின் ஒரு கிளையே அல்லது திரிபேயாகும். தெலுங்கு நாட்டில் என்றுமே அது காணப்படாதது மட்டுன்று, தெலுங்கு மொழியின் பெயர், வரலாற்றில் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் அதன் அரங்குகளும் அதன் முழு இசையியக்கமும் சிறந்து விளங்கின. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும் கலை உயர்வையும் கலையின் பழமையையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலுக்கு உரை வகுத்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் … … காலத்திலும் சிலப்பதிகாரத்திற்கு உதவியாகவிருந்த இசையிலக்கண நூல்களும் இலக்கிய…