12,000 பண்களுக்கு உரிமையான தமிழிசைச் செல்வம்
ஆடல் பாடல் இசையே தமிழ் (3,45) என்ற அடியில் வரும் இசை என்பதை விளக்கும் அரும்பதவுரையாசிரியர் “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும்’ என்று கூறுகிறார். இன்றைய கருநாடக இசையுலகில் கூறப்படும் இராகங்களின் எண்ணிக்கை 1230க்கு மேல் இல்லை. அன்ற இருந்தனவாக அரும்பதவுரைகாரர் கூறும் 11991 என்ற பண்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. இந்த எண்ணிக்கை ஏதோ குத்துமதிப்பாகச் சொன்னதாக இருக்காது என்பது உறுதி. அப்படிச் சொல்லியிருந்தால் ‘பன்னீராயிரம் ஆதியிசைகள்’ என்று சொல்லியிருக்கலாம். ஏதோ…