கலைச்சொல் தெளிவோம் 61. பெயர்வுக் காலம்-transit period
61. பெயர்வுக் காலம்-transit period பெயர்வு ஊர்வயின் பெயரும்பொழுதில் (அகநானூறு : 64.13) எக்கண்டு பெயரும்காலை (அகநானூறு : 318.11) அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால் (கலித்தொகை :108.5) பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன் (குறிஞ்சிப்பாட்டு : 243) பந்தொடு பெயரும் பரிவில்லாட்டி (நற்றிணை :140.7) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது (புறநானூறு : 253.1) இடப் பெயர்வு சங்க இலக்கியங்களில், பெயரும்பொழுது (1), பெயரும்காலை (1), பெயருங்கால் (1), பெயரின்(6), பெயரும் (38), எனவும் எதிர்மறையில் பெயராது (3)…
மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!
இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர். திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர். ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து…