கலைஞர்   என்றும்  கதிராய்   ஒளிர்வார் ! 1. திருக்குவளை  எனுமூரில்   அஞ்சுகத்தாய்                   முத்துவேலர்  அன்பால் ஒன்றி   ஆற்றலுருக்  கொண்டாரை  அருமைந்             தாய்க்  கலைஞரையே  ஈன்றெடுத்தார் திருவாகும்  கல்வியினைத் தேடுகையில்                 செந்தமிழிற்    பற்றுக்  கொண்டும்      ஈரோட்டுப்  பெரியாரின்  ஈடில்லாப்         பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும் பெருமைமிகு  அண்ணாவின் பீடுநிறை      உணர்வதனைப் பெற்றுக் கொண்டும்     பைந்தமிழ   நாடதனில்  பாங்குறவே                     ஐந்துமுறை  முதல்வ  ராகி இருளடிமைத்  தீவீழ்ந்த  இனமதனை         எழுகதிராய்  எழவும்  வைத்தோர்     ஈடிணையும்  இல்லாதே …