கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள், “மேடவாக்கம் – சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம்செய்யப்படும். என்றும் தென்கிழக்குஆசியாவிலுள்ள 5 பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் “அண்ணா, கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை ஆட்சி மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும் உறுதிபடக் கூறினார். 2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்விருதுகள்’’ வழங்கும் விழாவில், முதல்வர் …