திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விவரம்
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விவரம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாய் வழங்கித் தோற்றுவித்துள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பெறும். இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும். பத்து இலட்சம் உரூபாய் (உரூ.10,00,000) பரிசுத்தொகைக்கான காசோலை, மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசாகக் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவச் சிலை ஆகியவை…
ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 – ஆடி 22, 2049 / ஆகத்து 07, 2018) தி.மு.க.வரலாற்றின் பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும் ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரத்தில் பங்கேற்கும் அகரமுதல மின்னிதழ் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார்…
அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…
வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு – மு.கருணாநிதி
வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே தொடங்கிய வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக்குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும்…