தில்லித்தமிழ்ச்சங்கத்தில்  கவியரங்கம் நாள் – ஆடி 02, 2047  / 17-07 -2016   இடம் – தில்லித்  தமிழ்ச்சங்கம் தலைப்பு – இமயம் முதல்  குமரி  வரை தலைமை – கவிஞர்  காவிரிநாடன் பாடும் கவிஞர் :   கருமலைத்தமிழாழன் தமிழ் வணக்கம் முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே  கன்னியென   இலங்கு   கின்றாய் தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில் திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே எத்திக்கும்   புகழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் ! எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும் வித்தாக    முளைத்துநின்றாய் ! …