கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை  கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு “வங்கத்தின் கங்கை” இலக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஐப்பசி 19, 2046 / 01.11.2015 ஆம் நாள் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும் வாய்ப்பு சங்கத்தின் 75 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் செயலர் திருமிகு சித்ரா இராமகிருட்டிணன், துணைத்தலைவர் திரு நக்கீரர் அன்பால் சொ.வினைதீர்த்தானுக்கு அமைந்தது.   அவர் தம்முடைய உரையில் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டு” அங்கு வந்திருந்த சுவைஞர்கள், பங்காளர்களை வரவேற்றார்; இளம் மாணவர்களுக்குப் பாரதியார்…