சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு
சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! கண்ணன் நாகராசு
தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு
தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள்,…
காவியச் சதுக்கம் – கவிஞர் தமிழவன்
கல்லறை தின்றதோ எங்கள் மறவரை களங்கள் தேடுதே அந்த வீரரை நிலத்தில் இடியான எங்கள் சோதரை கண்ணிவெடிகள் மறக்குமா புதைத்த மாதரை விடிவு ஒன்று தான் எம் மண்ணின் மூச்சு விடியும் வரையும் இல்லை வாய்ப்பேச்சு தமிழர் என்பதே தலைவிதி ஆச்சு என்று சங்கை ஊதியே களம் சேர்ந்தாச்சு முப்படை என்பதே உலகின் வழக்கம் நாற்படை கண்டது புலிகள் இயக்கம் பகையின் தலையில் இடிகள் முழக்கம் அது கரும்புலி என்றொரு காவியச் சதுக்கம் …….. நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278
தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.பழனிவேலன், பி.ஓ.எல்
‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன. 1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். 2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத்…