‘கல்லும் வெல்லும்’ – இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார் வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர் மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில் நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,. பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்…