மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர…