வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! – சி.இலக்குவனார்
வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல்போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும். கண்ணில்லாது வாழ முடியாததுபோல் கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெறமுடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றமாகும்….