வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்
(வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2 – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்4. கல்வியும் கேள்வியும் மக்களை மாக்களினின்றும் பிரித்துக் காட்டுவது அவர் பெற்ற கல்வியறிவே. பல்வேறு நூல்களைக் கற்றலால் பெற்றிடும் அறிவே கல்வியாகும். கற்றறிந்த நல்லார் சொல்லக் கேட்டலால் பெற்றிடும் அறிவு கேள்வியாகும். பலகால் பழகிய பழக்க முதிர்ச்சியின் விளைவாலாகிய அறிவு அனுபவமாகும். இங்ஙனம் அறிவை முக்கூறு படுத்தலாம்.முதற்கண் கல்வியறிவை நோக்குவோம். கல் என்ற சொல், தோண்டு என்ற பொருளைத் தருவது. உள்ளத்தில் ஆழ்ந்த அறியாமையைக்…