கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)
கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) முன்னுரை நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில் புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள் பள்ளி ஒளிபரப்பு…