கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன – தி.வை.சதாசிவம்

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன   கல்வெட்டுகள் என்பன கோயில் சுவர்கள், கற்பாறைகள் மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துகளேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுகள் என்ற தலைப்பின்கீழ் அடக்கிக்கொள்வது பொருந்தும். … கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் எல்லாம் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்

அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைக்கல்வெட்டுகள்

  மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர்ப் பேணுகை, நீர் மேலாண்மையில் முன்னோடியாகத் தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகச் செப்பேடுகள், கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு ஏரிகள் உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு ஆவணப் பொறிப்புகளையும், அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம்.   அரசனின் எந்த ஆணைப்படி அது அமையப்பெற்றது, அதைப் பேணுவதற்கு அளிக்கப்பட்ட கொடைகள், அந்த அரசனின் அரச முத்திரை ஆகியவை…

திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா, ஈரோடு

சான்றோர் பெருமக்களுக்கு வணக்கம்.   தங்களைப் போன்ற நல்உள்ளம் படைத்த சான்றோர்கள், குறள் மலைச்சங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி.     11.05.2014 அன்று அரிமா சங்கம் நடத்தும் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக இருப்பின் வாழ்த்துரையையும், தங்கள் கருத்துக்களையும் இமெயிலில் அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம்.     நன்றி. வணக்கம்.       அன்புடன் பா. ரவிக்குமார் தலைவர், குறள்மலைச் சங்கம்          எண்:…