நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்
எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா
கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்
கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…