வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…