அகநானூற்றில்  ஊர்கள்: 4/7  – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 3/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -4/7   ஊனூர்   ஊனூர், தழும்பன் என்ற குறுநில மன்னன் ஆண்ட ஊர் ஆகும். இவ்வூர் மருங்கூர் பட்டினத்திற்கு அருகில் உள்ளது. முழங்கும் கடல் அலைகள் காலைப்பொழுது கரைவந்து மோதும் நெல்வளம் மிக்க ஊர். காதல் பறவையான மகன்றில் பறவைகள் வாழுமிடமாக ஊனூர் திகழ்கின்றது என்பதனை, “பழம்பல் நெல்லின் ஊனூர் ஆங்கன்”                     (அகநானூறு 220) மன்னன் பெருங்கொடை வழங்கும் சிறப்பினை உடையவன் என்பதை, “……..தழும்பன்                  கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர்”                     (அகநானூறு…

சங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர்

  ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ்வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாகும். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர்மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். – க. வெள்ளைவாரணர்…