கவனயீர்ப்புப் போராட்டம்
கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை
பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.
பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !
தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு விடை என்ன ? பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் ! நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிறன்று (வைகாசி 09 / 22-05-2016) பிரித்தானியத்தலைமையர்(பிரதமரது) வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது. வெள்ளையூர்தி கடத்தல்கள், கைதுகள் எனச் சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த…
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ! நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது. பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…