தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>> சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக…