கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை
மண்ணும் மரபும் – இளைய தலைமுறையினருக்கு இனிய அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் ‘மண்ணின் மணம்’ என்னும் முதற்பகுதியில் தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில் தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி தமிழ்கொலை புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார். ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில் மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…