காதல் ஒரு விந்தை!
– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…