அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! – ப.கண்ணன்சேகர்
அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது! எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது! பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே! பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே! வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!…
வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! – ப.கண்ணன்சேகர்
வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! காற்றில் மிதக்கும் ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும் தகவல் நலமென்றே தவறாது மக்கள் கேட்டிடும் தன்னிக ரில்லா ஊடகம்! ஊடக வரிசையில் வானொலிதான் உயர்ந்தே நிற்கும் எப்போதும் உயர்வான் கற்று பாமரன்ய்ம்! பாமரனும் பயிலும் பள்ளியென பாதைப் போட்ட வானொலியே படிக்க சொல்லும் வீடுதோறும்!…