கருத்தரங்கம் 3 :இந்தியால் தமிழுக்குக் கேடு…..! – கவிஞர் அரங்கசாமி
இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின் – பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று. மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி…